மத்தியஸ்த பயிற்றுவிப்பு உத்தியோகத்தர்களுக்கான இலங்கையில் காணப்படுகின்ற பொதுவான சட்டங்கள், சொத்து தொடர்பான சட்டங்கள் மற்றும் நிர்வாக அம்சங்கள் குறித்த பயிற்சிநெறி ஒக்டோபர் மாதம் 23, 24 ஆகிய தினங்களில் சிரேஷ்ட மத்தியஸ்த ஆலோசகர் மாரிமுத்து திருநாவுக்கரசு அவர்களால் நாடத்தப்பட்டது. 19 மத்தியஸ்தர் பயிற்றுவிப்பு உத்தியோகத்தர்கள் பங்குபற்றிய இந்த 2 நாள் பயிற்சிநெறி கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த பயிற்சிநெறியில் அரசு மற்றும் தனியார் காணிகள் தொடர்பிலும் விசேட மத்தியஸ்த சபைகள் (காணி) முகாமைத்தவம் சார்ந்த சட்டங்கள் தொடர்பில் விளக்களமளிக்கப்பட்டது. அத்துடன்’ மேற்படி நடைமுறைகள் குறித்தும் மத்தியஸ்தர் பயிற்றுவிப்பு உத்தியோகத்தர்களின் பொதுவான கண்ணோட்டம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டதுடன் அவர்களது திறன்கள் மேன்படுத்தப்பட்டது.
இங்கு கலந்துரையாடப்பட்ட முக்கிய தலைப்புகள் பின்வருமாறு:
- இலங்கையில் காணி மற்றும் சொத்துக்கள் குறித்த விளக்கமும் தனியார் காணிகளையும் சொத்துக்களையும் பதிவு செய்தல் தொடர்பான சட்டக் ஒழுங்குமுறைகள்
- வாரிசுரிமை, மரபுரிமை, ரோமன் டச்சு சட்டம், கண்டிய சட்டம், தேசவலமை சட்டம் மற்றும் முஸ்லிம் சட்டம் ஆகிய சட்டங்கள்
- அரச காணிகள் குறித்த விளக்கமும் காணி அமைச்சின் வகிபாகமும், காணி நிர்வாகத்திற்கான மாகாண திணைக்களங்கள் மற்றும் அரச காணிகளை கையாள்வதற்கு அதிகாரம் பெற்ற ஏனைய நிறுவனங்கள்
- அரச காணிகள் தொடர்பான முக்கிய சட்டங்கள்: காணி அபிவிருத்தி பட்டயம், அரச காணிகள் கட்டளைச் சட்டம், காணி அன்பளிப்புச் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், நிலம் சுவீகரித்தல் சட்டம்
- சிறப்பு மத்தியஸ்த சபைகள் நிர்வாகம் (காணி) - மூலோபாயங்களும் நிர்வாக ரீதியான சிறந்த நடைமுறைகளும்
இலங்கையில் மத்தியஸ்த திட்டத்தினை அபிவிருத்தி செய்வற்காக பயிற்சிநெறிகளை வழங்குகின்ற நடவடிக்கைகளில் ஆசிய நிலையம் ஈடுபடுவது குறித்து மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு தனது மகிழ்சியைத் தெரிவிக்கின்றது.. அத்துடன் மத்தியஸ்த ஆணைக்குழு சார்பில் ஆணைக்குழுவின் பிரதிச் செயலாளரும் மேலதிக செயலாளரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

