Events & Activities
ஆய்வு முடிவுகளை மத்தியஸ்த சபை ஆணைக்குழு மற்றும் நீதி அமைச்சு என்பவற்றிடம் முன்வைத்தலும் விளக்கமளித்தலும் - ஒக்டோபர் 2023
ஊவா மாகாணத்தின் சமூக மட்டத்தில் காணப்படுகின்ற காணித் தகராறுகள் மற்றும் கண்டி, பொலன்னறுவை, மொணராகலை, கம்பஹா, கொழும்பு மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் சமூக மட்டத்தில் நிதி தொடர்பான தகராறுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டு ஆய்வு ஒன்று நடாத்தப்டப்டிருந்த்து. இந்த ஆய்வு தொடர்பாக விளக்கமளிப்பதற்கான நிகழச்சி 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது,. . இந்நிகழ்வில் நீதி அமைச்சு, மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு, சர்வதேச மாற்றீட்டு தீர்வு கள் தொடர்பான மத்திய நிலையம் (IADRC), வறுமை பகுப்பாய்வு மையம் மற்றும் ஆசிய நிலையம் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் ஹெக்டர் யாப்பா அவர்களின் வரவேற்புரையுடன் நிகழ்வு ஆரம்பமானது. அதனை அடுத்து ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட இரண்டு வகையான மதிப்பீடு ஆய்வுகள் தொடர்பிலும் அது நடாத்தப்பட்ட சூழல் தொடர்பிலும் சுருக்கமான விளக்கம் வழங்கப்பட்டது. ஆசிய மன்றத்தின் பால்நிலை மற்றும் நீதி தொடர்பான பிரிவின் பணிப்பாளர் கலாநிதி ரமணி ஜயசுந்தர அவர்கள் இந்த விளக்கத்தினை வழங்கினார்.. நிகழ்வின் அடுத்த அம்சமாக வறுமை தொடர்பான பகுப்பாய்வுக்கான நிலையத்தின் பிரதிநிதித்துவப்படுத்தும் கலாநிதி காயத்ரி லொக்குகே, திரு மொஹமட் முனாஸ், திருமதி நதியா அஸ்மி, ஆகியோரைக் கொண்ட ஆய்வுக்குழு தமது ஆய்வுகளின் மூலம் பெற்றுக்கொண்ட முடிவுகள் தொடர்பான விளக்கதினை வழங்கினர். அந்த நிகழ்வின்போது தகராறு / பிரச்சினை மற்றும் அவற்றின் வகைகளை அடையாளம் காணலும் புரிந்துகொள்ளலும், அவ்வாறான தகராறுகள் தொடர்பில் தரப்பினர் குறித்து புரிந்துகொள்ளல், அவ்வாறான தகராறுகளைத் தீர்ப்பதற்காக தரப்பினர்கள் தற்போது பயன்படுத்துகின்ற வழிமுறைகள், தகராறுகளைத் தீர்ப்பதற்கான முறை ஒன்றினைக் கண்டுபிடித்தல் அத்துடன் காணி மற்றும் நிதி தொடர்பிலான தகராறுகளைத் தீர்க்கும் போது மாற்றிட்டு தகராறு தீர்க்கின்ற முறை ஒன்றாக மத்தியஸ்த செயற்பாட்டினை அறிமுகம் செய்வதை பரிந்துரைத்தல் போன்ற விடயங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது., கண்டி, பொலன்னறுவை, மொணராகலை, கம்பஹா, கொழும்பு மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் நிதி சம்பந்தமான விசேட மத்தியஸ்த சபைகளும் அத்துடன் பதுளை மற்றும் மொணராகலை மாவட்டங்களில் காணி சம்பந்தமான விசேட மத்தியஸ்த சபைகளும் நிறுவுவது தொடர்பில் நேரடியாக பங்களிப்பு வழங்குகின்ற இந்த மதிப்பீட்டு ஆய்வுகளின் முடிவுகள் தொடர்பில் நீதி அமைச்சும் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவும் தங்களது பாரட்டுக்களைத் தெரிவித்தனர்.

