Events & Activities
மத்தியஸ்தர் பயிற்சி உத்தியோகத்தர்ளுக்கான (MTOs) மத்தியஸ்த திறன்கள் மற்றும் நுட்பங்கள் தொடர்பான உயர் பயிற்சி - மே 2023
மத்தியஸ்தர் பயிற்சி உத்தியோகத்தர்ளுக்கான (MTOs) மத்தியஸ்த திறன்கள் மற்றும் நுட்பங்கள் தொடர்பான உயர் பயிற்சிச் செயலமர்வு 2023 மே 15 முதல் 19 வரை மூவன்பிக் ஹோட்டலில் USA, Collaborative Decision Resources Associates எனும் நிறுவனத்தின் இன் அதிபர் ஜொனாதன் பார்ட்ச் என்பவரால் நடத்தப்பட்டது. 20 மத்தியஸ்தர் பயிற்சி உத்தியோகத்தர்கள் இந்தச்செயலமர்வில் பங்கேற்றனர், இந்த நிகழ்வின் போது பயிற்றுவிப்பாளர்களிடம் காணப்பட்ட அறிவு மறுபரிசீலனை செய்யப்பட்டது, அத்துடன் சட்ட மறுசீரமைப்பு மற்றும் பலவகையான தரப்பினர்களை மத்தியஸ்தம் செய்தல் போன்ற புதிய கோட்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன, மேலும் மத்தியஸ்தர் பயிற்சி உத்தியோகத்தர்களின் திறன்களை விருத்தி செய்யும் நோக்கில் உருவகப்படுத்துதல்கள், செயற்பாடுகள் என்பன ஊடாக பயிற்றுவிக்கப்பட்டனர். 5 நாட்கள் தொடராக நடைபெற்ற இந்த செயலமர்வில் மத்தியஸ்த செயல்முறையின்: கோட்பாடுகளும் நடைமுறைகளும், மத்தியஸ்த செயல்முறையும் நிதி சார்ந்த தகராறுகளும், வீடு காணி சொத்து தகராறுகள், நீதி மறுசீரமைப்பு, பல சாரார்களை மத்தியஸ்தம் செய்தல் சமூக ஈடுபாடுகளும் மத்தியஸ்த பயிற்றுவிப்பு உத்தியோகத்தர்களுக்கான வேலைத் திட்டங்கள்’ என பல்வேறு தலைப்புகளில் விரிவுரைகள் நடாத்தப்பட்டன. ஏற்கனவே மத்தியஸ்த பயிற்றுவிப்பு உத்தியோகத்தர்களிடம் காணப்பட்ட விடய அறிவு மறுபரிசீலனை செய்யப்பட்டதுடன் மேடைப்பேச்சுத் திறன்களை விருத்தி தொடர்பான பயற்சிகளும் வழங்கப்பட்டது. அத்துடன் நவீன முறைகளை எதிர்கால நடவடிக்கைகளில் உட்டுபத்தல் தொடர்பாகவும் கலந்துரையடப்பட்டது. மத்தியஸ்த செயற்பாடுகளின் உலகலாவிய போக்கு தொடர்பில் எதிர்காலத்தில் மாற்றியமைக்கவேண்டி விடயங்கள் தொடர்பிலும் இந்தச் செயலமர்விக் கவனம்செலுத்ப்பட்டது.

