Events & Activities
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான முன்னோடிப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் – 2022 ஜனவரி முதல் நவம்பர் வரை
மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவுக்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான முன்னோடிப் பயிற்சித் நிகழ்ச்சித் திட்டமானது பிரிட்டிஷ் கவுன்சில் (British Council) மற்றும் ஆசியா நிலையம் என்பவற்றின் பங்களிப்புடன் நடைபெற்றது. 2022 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப் பகுதியில் மூன்று நாட்கள் வதிவிட அடிப்டையில் 09 நிகழ்ச்சிகளாக இது நடாத்தப்பட்டது. இந்தப் பயிற்சித்தொடரில் 360 அபிவிருத்தி உத்தயோகத்தர்கள் பங்குகொண்டு பயன்பெற்றனர். புதிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் (மத்தியஸ்தம் தொடர்பான) திறன்களை விருத்தி செய்து தேசிய ரீதியிலான மத்தியஸ்த செயற்பாடுகளுக்கு ஒத்தாசை வழங்குகின்ற அடிப்படையில் அவர்களை தயார் படுத்துவது இந்த செயலமர்வின்நோக்கமாக இருந்த்து. அத்துடன் அவர்களது கடமைகளை திறம்படவும் வினைத்திறனாகவும் மேற்கொள்வதற்காக அவர்களது திறன்ளை விருத்தி செய்வதும் நோக்கங்களில் உள்ளடங்கியிருந்த்து.. நீதிக்கான பிரவேசம் தொடர்பிலான தேசிய மற்றும் சர்வதேச கண்ணோட்டம்,. ஜனநாயகம், சட்டத்தின் ஆழுகையும் பொதுமக்களின் ஈடுபாடும், சமத்துவம், பல்வகைமையும் உட்சேர்க்கையும் (EDI), மாற்றுத் தகராறு தீர்வு (ADR), மத்தியஸ்தம் தொடர்பான கோட்பாடுகளும் நடைமுறைகளும், இலங்கையில் உள்ள மத்தியஸ்த செயல்முறை - சட்ட மற்றும் நிர்வாக கட்டமைப்பு, அரச நிர்வாக கட்டமைப்பு, அரச நிர்வாக சூழல், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கடமைப் பட்டியல், பொதுவாக ஒழுங்குவிதிதகள், தொழில் சார் நிபுணத்துவம், தலைமைத்துவ திறன்கள்,தொடர’பாடல், குழுப்பணி, நிர்வாக திறன்கள். என பல்வேறு தலைப்புகளில் இந்தப் பயிற்சித் திட்டம் மூலமாக கவனம் செலுத்தப்பட்டது’.

