Events & Activities

EVENTS
  • None

இலங்கையில் மத்தியஸ்தத்தில் பால்நிலையினை மையநீரோட்டப்படுத்தல் தொடர்பான உயர் செயலமர்வு - நவம்பர் 2022

மத்தியஸ்தத்தில் பால்நிலையினை மையநீரோட்டப்படுத்தல் தொடர்பான செயலமர்வு 2022 நவம்பர் 18, 19 ஆகிய திகதிகளில் கொழும்பில் அமைந்துள்ள சினமன் லேக்சைட் ஹோட்டலில் ஆசியா நிலையத்தின் மூலமாக நடாத்தப்பட்டது. இந்தச் செயலமர்வானது பால்நிலை மற்றும் பெண்கள் தொடர்பிலான சமத்துவம் என்ற கருப்பொருளின் கீழ் 9 தலைப்புக்களில் விரிவுரைகளை உள்ளடக்கியிருந்த்த்து. ஆசிய நிலையத்தின், நீதி மற்றும் பால்நிலை செயற்திட்டப் பணிப்பாளர் டாக்டர் ரமணி ஜெயசுந்தர, மத்தியஸ்தம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சட்டத்தரணி திரு. எம். திருநாவுக்கரசு, ஆசியா நிலையத்தின் பெண்களின் குரல் மற்றும் தலைமைத்துவ செயற்திட்டம் /ஆசியா நிலையத்தின் முகாமையாளர் திருமதி உதேனி தேவருப்பெரும, ஆகியோர் இந்த நிகழ்வில் விரிவுரை வழங்கினர். இந்த நிகழ்வில் பால்நிலையினை மையநீரோட்டப்படுத்தல்; தொடர்பான என்னக்கருவும் விளைவுகளை இனங்காணலும், முரண்பாடுகளின்போதான பால்நிலை சார் பிரச்சினைகளை இனங்காணல், பெண்களின் உரிமைகள் தொடர்பில் இலங்கை நீதித் துறையின் எதிர்வினையாற்றல், மத்தியஸ்த செயற்பாட்டில் பெண்களுக்கான குரலும் அவர்களுக்கான இடத்தினை உருவாக்குதலும், முரண்பாடொன்றில் பங்காளர்களான பெண்கள் தொடர்பில் மத்தியஸ்த செயற்பாட்டு இடம்பெறவேண்டிய முறைகள். மற்றும் பாதுகாத்தல், வலுவூட்டல், பல்வகைமையும் உட்சேர்க்கையும், இலங்கையில் பெண்களின் உரிமைகளுக்கான நீதித்துறையின் ஏற்பாடுகள் என்ற அடிப்படையிலான தலைப்புக்களில் நடாத்தப்பட்ட இந்தச்செயலமர்வில் 25 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அடிப்படையில் 20 மத்தியஸ்தர் பயிற்றுவிப்பு உத்தியோகத்தர்கள் (13 ஆண்கள் மற்றும் 7 பெண்கள்) கலந்து கொண்டிருந்தனர்.