Events & Activities
மத்தியஸ்த்தத்தின் உலகலாவிய போக்குகள் என்ற தலைப்பிலான செயலமர்வு - மே 2023
2023 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி மத்தியஸ்தத்தின் உலகலாவிய போக்குகள் என்ற தலைப்பில் செயலமர்வு ஒன்று Jonathan Bartsch என்பவரால் நடத்தப்பட்டது. BMICH அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நீதி அமைச்சின் உத்தியோகத்தர்கள் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள், நிதியுதவி வழங்குவோர்., சர்வதேச மற்றும் உள்நாட்டு அரச சாராத சமூக சேவை நிறுவனங்கள், சட்டக் கல்வி வழங்குகின்ற நிறுவனங்கள், தகராறுகள் தீர்ப்பதற்கான மாற்றீடு தொடர்பில் செயற்படுகினற தரப்பினர்கள், தனிநபர்கள் என பலரும் கலந்து கொண்டனர். தகாராறுகள் தீர்த்தல் தொடர்பிலான மத்தியஸ்த செயற்பாடுகளின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்ற அடிப்படையில் இந்த செயலர்வு வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும் மத்தியஸ்தம் குறித்து புரிந்துணர்வு உள்ள சமூகம் ஒன்றினை உருவாக்குதல், மத்தியஸ்த செயற்பாட்டிளை இன்றும் மேம்படுத்துவதற்காக ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமாக அடைந்துகொள்ள முடியுமான சமூக ரீதியான பயன்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

