விசேட மத்தியஸ்தம் என்னார்ல் என்ன?

சட்டங்களில் குறிப்பிடப்படுவதற்கு அமைய சில “விசேட” வகைகளுக்குள் அடங்குகின்ற சில தகராறுகளை மத்தியஸ்தம்செய்கின்ற நடவடிக்கை விசேட மத்தியஸ்தம் என்பதாக அழைக்கப்படுகின்றது. விசேட ம்தியஸ்த செயன்முறையானது அதன் கட்டமைப்பு செயறன்முறை என்பவற்றின் ஊடாக சமூக மத்தியஸ்த செயன்முறையிலிருந்து சிறிய அளவில் வேறுபடுவதாகக் காணப்படிகின்றது.

2003 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க. மத்தியஸ்தம் (தகராறுகளின் விசேட வகைகள்) சட்டத்தின் அடிப்படையில் விசேட வகையில் அடங்குகின்ற தகராறுகளைத் தீர்ப்பதற்காக விசேட மத்திய சபைகள் நிறுவப்படுகின்றன. இந்த விசேட வகைகளில் அடங்குகின்ற தகராறுகள் எவை என்பது குறித்து வர்த்தமானி அறிவித்தல் மூலமக நீதி அமைச்சினால் அறிவிக்கப்படுகின்றது.

சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளில் இருந்து உருவாகும் பிணக்குகள் தொடர்பாக நீதியைப் பெற்றுக்கொடுத்தலுக்கான முக்கியத்துவத்தினை அடையாளம் கண்டுகொள்வதற்கான வழிமுறையாக விசேட மத்தியஸ்தம் என்பது உருவாக்கப்பட்டது. . தனியார் தரப்பினருக்கும் அரசுக்கும் இடையேயான தகராறுகளை எளிதாக்கி வைப்பதற்கு அவர்கள் இரு தரப்புக்கும் இடையில் காணப்படுகின்ற இடைவெளியினைக் குறைக்கின்ற நடவடிக்கை இந்தத் திட்டத்தின் ஊடாக நடைபெறுகின்றது.