விசேட மத்தியஸ்த சபைகள்
2003 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க மத்தியஸ்த (விசேட வகையிலான பிணக்குகள்) சட்டத்திற்கு அமைய சில விசேட மத்தியஸ்த சபைகள் நிறுவப்பட்டது. அவசிப்படுகின்ற வேளைகளில் இதில் உள்ளடங்குகின்ற விசேட பிரிவுகள் என்ன என்பது குறித்து நீதி அமைச்சினால் தீர்மானிக்கப்படுகின்றது. இதற்காக நீதி அமைச்சானது நாட்டில் காணப்படுகின்ற சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை பரீசீலனை செய்து அவற்றுக்கு அமையவே மேற்படி நடவடிக்கையினையும் மேற்கொள்கின்றது. வர்த்தமானியில் குறிப்பிடுகின்ற ஒரு வகைக்கு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளுடன் தொடர்புபடுவதாக எற்படுகின்ற தகராறுகளுக்கு தீர்வு காணவேண்டிய பிதேசம் அல்லது பிதேசங்கள் ("சிறப்பு மத்தியஸ்த சபைப் பிதேசம்" என்பதாக) அமைச்ரினால் குறிப்பிடப்படவேண்டும்.. ஏதும் தேவைகள் ஏற்படும் போது குறித்த ஒரு காலப் பகுதிக்காக விசேட மத்தியஸ்த சபைகள் நிறுவப்படமுடியும்
குறிப்பிட்ட விசேட வகைகள் தொடர்பில், சிறப்புச் தேர்ச்சி அல்லது நிபுணத்துவம் காணப்படுகின்ற மத்தியஸ்தர்களைக் கொண்டே விசேட மத்தியஸ்த சபைகள் அமைக்கப்படுகின்றன. விசேட மத்தியஸ்த சபைகளுக்காக மத்தியஸ்தர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்ட பின்னர் உரிய நியமனம் வழங்கப்படுகின்றது. அத்துடன் அவர்கள் அரச உத்தியோகத்தர்களாகவே கருதப்பட்டு அவர்களது சேவைக்கான சம்பளமும் வழங்கப்படுகின்றது.. பொதுவாக மத்தியஸ்தர்களுக்கான நியமனங்கள் அடுத்த மூன்று வருடங்களுக்காகவே வழங்கப்படுகின்றன. குறித்த காலம் முடிவடைந்ததும் அவர்கள் மீண்டும் நியமனம் வழங்கப்பட தகுதியானவர்களாகக் கருதப்படுமானால் மீண்டும் நியமனம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.
விசேட மத்தியஸ்தம் என்பது தோற்றத்தில் சமூக மத்தியஸ்த செயல்முறையினைப் ஒத்தாக இருந்தலும் அதிலிருந்து ஓரளவு வேறுபட்டதாகக் காணப்படுகின்றது. யாரேனும் சர்ச்சைக்கு உட்பட்ட ஒருவர் தனக்கு ஏற்பட்ட குறைகளைக் குறிப்பிட்டு விண்ணப்பம் ஒன்றினை எழுத்து மூலமாக விசேட மத்தியஸ்த சபையிடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். இவ்வாறு விண்ணப்பம் கிடைக்கப்பெற்றதும் சர்ச்சையுடன் தொடர்புபடுகின்ற அனைத்துத் தரப்பினருக்கும் அறிவிப்பதற்கும், சாட்சிகனை ஆஜராகுமாறு வேண்டுவதற்கும், தேவைவையான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கோருவதற்குமான அதிகாரங்கள் மத்தியஸ்த சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மத்தியஸ்த அமர்வுகளுக்கு விசேட ஆலேசனைகளோ அல்லது விசேட நிபுணத்துவங்களின் தேவைகளோ ஏற்படும் போது அவற்றைப் பெற்றுக் கொள்ளவதற்கான அதிகாரங்களும் மத்தியஸ்த சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தேவை ஏற்படுமிடத்து சர்ச்சைக்குரிய விடயத்துடன் தொடர்புடைய நிபுணத்துவ ஆலோசனைகளை எந்த ஒரு நபரிடமிருந்தும் மத்தியஸ்த்த குழு பெற்றுக் கௌளலாம். மத்தியஸ்த நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக கிராம உத்தியோகத்தரின் உதவியை நாடுவதற்கும். விசேட மத்தியஸ்த சபைகளுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
விசேட மத்தியஸ்த சபையில் ஒப்படைக்கப்பட்ட தகராறு தீர்வு எட்டப்படும்போது அதற்கான சான்றிதழ் வழங்கப்படவேண்டும். அத்துடன் குறித்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாவிடின் தீர்வு காணப்படவில்லை என்ற சான்றிதழ் வழங்கப்படவேண்டும். ,இவ்வாறு முடிவடைகின்ற தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கான .உரிய நடவடிக்கைக்கான அடித்தாளம் அமைப்பதற்கு குறித்த தரப்பினர்களுக்கு உதவப்படும்.

