காணி தொடர்பான தகராறுகள் என்பது பொதுவான நிகழ்வுகளாகக் கருதப்படுவதுடன் இவைகள் சமூக மத்தியஸ்த சபையிடமே ஒப்படைக்கப்பட்டு மத்தியஸ்தம் செய்யப்பட்டு வந்தது. எனினும் சாதாரண பிரஜைகளுக்கும் அரசாங்கத்தும் இடையில் காணப்படுகின்ற காணித் தகராறுகள் தீர்க்னப்படாமல் அவற்றின் எண்ணிக்கையில் அதிகரப்பு ஏற்பட்டது. இவற்றுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறையாக வடக்கு மற்றும் கிழக்கில் காணி உரிமை தொடர்பான பிணக்குகளைத் தீர்ப்பதற்கு விசேட காணி மத்தியஸ்த சபைகளை ஸ்தாபிக்கவேண்டிய தேவை ஏற்பட்டது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, அனுராதபுரம், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு, குருணாகல், கண்டி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தற்போது பதினாறு (16) காணி விசேட மத்தியஸ்த சபைகள் (Land SMBs) செயற்பட்டுவருகின்றன.. காணி தகராறுகள் தொடர்பான நிதி எல்லைகள் 2021 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டமூலத்தில் ஒரு மில்லியன் ரூபாய்க்கு (ரூ. 1,000,000) குறைவாக இருக்கின்ற தகராறுகள் மத்தியஸ்தத்திற்கு எடுக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விசேட மத்தியஸ்த சபைகள் காணிப் பிணக்குகளுக்குளைத் தீர்ப்தற்காக சட்ட ரீதியானதும் நிர்வாக ரீதியானதுமான வழிமுறைகள் மூலமாக முடிந்த அளவில் முயற்சிகளைமேற்கொள்கின்றது. காணி தொடர்பான பிணக்குகள். தீர்க்கப்பட முடியாததாக அமையும் போது குறித்த மத்திய சபைகள் இது தொடர்பில் உரிய தீர்வை வழங்க முடியுமான இடங்களுக்கு பிரச்சினையை அல்லது சம்பந்தப்பட்டவர்களை அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொகின்றது.