பாடசாலை மத்தியஸ்தம் என்றால் என்ன?
பாடசாலைகளில் ஏற்படுகின்ற பிணக்குகளை சமாதானமாகவும் செயல்திறன் மிக்கதாகவும் தீர்ப்பதற்குத் தேவையான திறன்களை மாணவர்கள் மத்தியில் உருவாக்கும் நோக்கில் பாடசாலை மத்தியஸ்த சபைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தகராறுகளைத் தீர்க்கின்ற செயற்பாடுகளில் முறையான தொடர்பாடல், சுமூகமான பேச்சுவார்த்தை நடாத்தல், சமரசம் செய்துவைத்தல், போன்ற செயற்பாடுகளின் முக்கியத்துவத்தை பாடசாலை மாணவர்கள் புரிந்துகொள்ள இது அவர்களுக்கு உதவுகிறது. பாடசாவை மத்தியஸ்த திட்டம் நாடு முழுவதும் உள்ள மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் மத்தியஸ்த செயற்திட்ட அதிகாரிகளின் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. நாளைய சமூகத் தலைவர்கள் என்ற வகையில் தகராறுகளைத் தீர்க்கும் செயற்பாடுகளில் பங்களிப்புச் செய்வதற்கு இந்தத் திட்டம் மாணவர்களுக்கு உதவியாக அமைகின்றது.

