மத்தியஸ்த சபைகள் அமைத்தல்

மத்தியஸ்த சபை ஒன்றினை அமைக்கும் போது பின்பற்றப்படவேண்டிய சட்ட ரீதியிலான சில நடைமுறைகள் காணப்படுகின்றன. அவைகள் கீழே குறிப்பிடப்படுகின்றது.

  1. மத்தியஸ்த சபை அமைக்கப்பட வேண்டிய பிரதேசம் குறித்த விபரங்கள் நீதி அமைச்சின் மூலமாக வர்தமானி அறிவித்தலாகப் பிரசுரிக்கப்படும்.
  2. தனிநபர்கள், சமூகசேவை நிறுவனங்கள் அரச நிறுவனங்கள் என்பவற்றுக்கு மத்தியஸ்த சபைக்கான பெயர்களைப் பரிந்துரைக்குமாறு அறிவித்தல் ஒன்று மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் வர்த்தமானி ஊடாகப் பிரசுரிக்கப்படும்.
  3. பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்காக மத்தியஸ்த சபைகள் ஆணைக்குவினால் நேர்முகப் பரீட்சைகள் நடாத்தப்பட்டு தகுதியுள்ளவர்கள் பயிற்சி வழங்குவதற்காகத் தெரிவுசெய்யப்படுவர்.
  4. மத்தியஸ்தர்களாவதற்கு அவசியமான திறன்களையும் நுட்பங்களையும் உள்ளடக்கிய விசேட பயிற்சிநெறி ஒன்று ஏற்பாடு செய்யப்படும்.
  5. அதனை அடுத்து நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்கள் மேற்படி பயிற்சி நெறியில் உட்படுத்தப்படுவர். இந்த பயற்சிநெறியின் போது பயிற்சிபெறுகின்றவர்கள் கண்காணிக்கப்பட்டு அவர்களது அறிவு, திறன் என்பன குறித்து பயிற்றுவிப்பாளர்களால் அறிக்கை தயாரிக்கப்கட்டு நியமனம் வழங்குவதற்கான பரிந்துரைகள் வழங்கப்படும்.
  6. மேற்படி பரிந்துரைகளுக்கு அமைய மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் நியமனங்கள் வழங்கப்பட்டு உரிய பிரதேசங்களுக்கான மத்தியஸ்த சபைகள் அமைக்கப்படும்.

விசேட மத்தியஸ்த சபை ஒன்றினை அமைக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய பொதுவான நடைமுறைகள் கீழே குறிப்பிடப்படுகின்றன

  1. தகராறுகளின் வகைகள், விசேட மத்தியஸ்த சபை அமைக்கப்பட வேண்டி பிரதேசம், நிதியின் அளவுகள், மத்தியஸ்தர்களாவதற்கான தகுதிகள் என்பன குறித்த விபரங்கள் நீதி அமைச்சின் மூலமாக வர்தமானி அறிவித்தலாகப் பிரசுரிக்கப்படும்
  2. தனிநபர்கள், சமூகசேவை நிறுவனங்கள் அரச நிறுவனங்கள் என்பவற்றுக்கு மத்தியஸ்த சபைக்கான பெயர்களைப் பரிந்துரைக்குமாறு அறிவித்தல் ஒன்று மத்தியஸ்த சபைகள் ஆணைக் குழுவினால் வர்த்தமானி ஊடாகப் பிரசுரிக்கப்படும்
  3. பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்காக நிதி அமைச்சினால்/ மத்தியஸ்த சபைகள் ஆணைக்குவினால் நேர்முகப் பரீட்சைகள் நடாத்தப்பட்டு தகுதியுள்ளவர்கள் பயிற்றப்படுவதற்காக மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் தெரிவு செய்யப்படுவர்.
  4. பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்காக மத்தியஸ்தர்களாவதற்கு அவசியமான திறன்களையும் நுட்பங்களையும் உள்ளடக்கிய விசேட ஆறு (6) நாட்கள் கொண்ட பயிற்சிநெறி ஒன்று மத்தியஸ்த பயிற்றுவிப்பாளர்களால் நடாத்தப்படும்.
  5. தெரிவு செய்யப்பட்டவர்கள் மேற்படி பயிற்சி நெறியில் உட்படுத்தப்படுவர். இந்த பயற்சி நெறியின் போது பயிற்சிபெறுகின்றவர்கள் கண்காணிக்கப்பட்டு அவர்களது அறிவு, திறன் என்பன குறித்து பயிற்றுவிப்பாளர்களால் அறிக்கை தயாரிக்கப்ட்டு நியமனம் வழங்குவதற்கான பரிந்துரைகள் மத்தியஸ்த சபைகள் ஆணைக் குழுவுக்கு வழங்கப்படும்.
  6. மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் நியமனங்கள் வழங்கப்பட்டு விசேட மத்தியஸ்த சபைகள் அமைக்கப்படும்
  7. விசேட மத்தியஸ்த செயற்பாடுகள் குறித்தும் சமரசம் செய்யப்பட வேண்டிய தகராறுகளின் வகைகள் குறித்தும் தேவையான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்ட மேலதிக பயிற்சிகள் விசேட வளவாளர்களைக் கொண்டு நடாத்தப்படும்  
  8. பங்குதார்களின் கலந்துரையடலும் விசேட மத்தியஸ்த சபைகள் அமைக்கின்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

மத்தியஸ்த சபைகளில் உள்ளடக்கப்படும் அங்கத்தவர் தொகை

ஒரு மத்தியஸ்த சபைக்காக 12 முதல் 15 பேர்கள் வரையில் நியமிக்கப்படுவதுடன் ஒவ்வொரு மத்தியஸ்த அமர்வுகளுக்கும் மூன்று பேர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும். மத்தியஸ்த சபையில் அங்கம் வகிக்கின்றவர்கள் மத்தியஸ்த அமர்வுகளுக்காக சுழற்றி முறையில் அமரச் செய்யப்படுவர். ஒவ்வொரு மத்தியஸ்த அமர்வுகளுக்கும் நியமிக்கப்படுகின்றவர்களில் ஒருவர் பிரதான மத்தியஸ்தராக இருக்கவேண்டும். 12 அல்லது 15 பேர் கொண்ட மத்தியஸ்த சபையின் தலைவராக செயற்படுகின்றவர் குறித்த 3 பேர் கொண்ட குழுவில் அங்கம் வகிப்பாரானால் பிரதான மத்தியஸ்தராக அவரே செயற்படுவார். அவர் அந்தக் குழுவில் அங்கம் வகிக்காதவிடத்து ஏனைய அங்கத்தவர்களில் ஒருவர் பிரதான மத்தியஸ்தராகச் செயல்படுவார்.