0112 334 323
|
mbc2016.gov@gmail.com
|
4th Floor, Ministry of Justice Building, No. 19, Sri Sangaraja Mawatha, Colombo 12

மத்தியஸ்த செயற்பாடு

1988 ஆம் ஆண்டின் மத்தியஸ்த சபைகள் சட்டமூலம் மற்றும் அதன் பின்னர் ஏற்படுத்தப்பட்ட திருத்தங்கள் என்பவற்றின் பிரகாரம் இலங்கை மத்தியஸ்த சபைகளினால் பிணக்குகளைத் தீர்க்கின்ற செயற்பாடுகளே முதன்மையான பணிகளாக மேற்கொள்ளப்படுகின்றன.

பிணக்குகளுக்கு உட்படுகின்ற சாரார் மத்தியஸ்த சபைக்கு விண்ணப்பம் ஒன்றினைச் சமர்ப்பித்து மத்தியஸ்த சேவையினைப் பெற்றுக் கொள்ளலாம்.. பொதுவாக மத்தியஸ்த சபைகளுக்கு கீழ்க் குறிப்படப்படுகின்ற 4 முறைகளில் ஏதாவது ஒன்றின் அடிப்டையிலேயே தகராறுகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.

  1. தரப்பினர்களுக்கு தாமாகவே தங்களது தகராறுகளை மத்தியஸ்த சபைகளுக்கு முன்வைக்கலாம்.
  2. ரூபா 1,000,000 இற்கு அதிகரிக்காத சொத்து, கடன், சேதம், கோரிக்கைகள் தொடர்பிலான சிவில் பிரச்சினைகள் கட்டாயமாக மத்தியஸ்த்த்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதாக சட்ட நடைமுறை காணப்படுகின்றது. இதில் விதிவிலக்குகளும் உண்டு
  3. சொத்துக்கள் தொடர்பான குற்றச்செயல்கள், அடித்தல், அத்துமீறல், அவமானப்படுத்தல் போன்ற கிரிமினல்.குற்றச் செயல்களும் மத்தியஸ்த சபையில் சமர்ப்பிக்கப்படலாம்.
  4. இரண்டு தரப்புகளும் உடன்படுமிடத்து நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்ற வழங்கு ஒன்றினை மத்தியஸ்த்த சபைக்கு சமர்ப்பிப்பதற்கு கோரிக்கை விடுக்கலாம். இந்த சந்தர்ப்பத்தில் குறித்த விடயமானது நீதிமன்றத்திற்கு பிரச்சினையாக அமையக்கூடாது என்பது கருத்தில்கொள்ளப்படும்.

இவ்வாறு தகராறு ஒன்று மத்தியஸ்த சபைக்கு சமர்ப்பிக்கப்படும் போது மத்தியஸ்த சபையானது மத்தியஸ்தர்கள் மூன்று பேர்களைக் கொண்ட குழுவை அமைத்து குறித்த தகராறினை அந்தக் குழுவிடம் ஒப்டைக்கும். மத்தியஸ்த செயற்பாட்டுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தலும் சமூகத்தில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவது மத்தியஸ்த சபையின் பொறுப்புகளாகக் காணப்படுகின்றதன.. அத்துடன் குறித்த தகராறுக்கு உட்பட்டவர்கள் இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்வு ஒன்றினை அடைவதற்காக ஒத்தாசை புரிவதும் அவர்களின் பொறுப்புக்களில் உள்ளடங்குகின்றது.

பொதுவாக தகராறுகளை 1 முதல் 4 மத்தியஸ்த அமர்வுகளில் சமரசரம் செய்து வைப்பதற்கு முடிவதுண்டு. மத்தியஸ்த சபைகள் வார இறுதி நாட்களில் விகாரைகள், பாடசாலைகள், சமூக மத்திய நிலையங்கள், போன்ற பொதுவான இடங்களில் நடைபெறுவதுண்டு. எனினும் சில தகராறுகளை சமரசம் செய்யும் போது தனிப்பட்ட இரகசியங்கள் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்படுமாயின். அதற்கு பொருத்தமான விசேட இடங்கள் தெரிவு செய்யப்படுவதுண்டு. இங்கு தகராறுக்கு உட்பட்டவர்களுக்கு சட்ட உதவிகள் என எதுவும் வழங்கப்படுவதில்லை என்பதுடன் குறிப்பிட்ட இரண்டு சந்தர்பங்களைத் தவிர மத்தியஸ்த நடவடிக்கைகளில் தகராறு ஏற்படுத்தியவர்கள் சார்பாக தோன்றுவதற்கு எந்த ஒருவருக்கோ அல்லது வழங்கறிஞர்களுக்கோ அனுமதி வழங்ககப்படக்கூடாது என்பதாக மத்தியஸ்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி விதிவிலக்கான இரண்டு சந்தர்ப்பங்கள் வருமாறு

  1. வாழ்க்கைத் துணைவர் ஒருவருக்காக மற்றவர் தோன்றலாம்
  2. பருவ வயதை அடையாத ஒருவருக்காக அல்லது ஏதேனும் விசேட தேவை உடையவர்களுக்காக அவர்களது பெற்றோர், அல்லது பாதுகாவலர்கள் தோன்றலாம்

மத்தியஸ்த சபையில் முன்வைக்கப்படுகின்ற தகராறுகள் வெற்றிகரமாக சமரசம் செய்து வைக்கப்படும் போது சமரசம் செய்யப்பட்டதற்கான சான்றிதழ் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும். அத்துடன் மத்தியஸ்தம் உடன்பாட்டுக்கு வர மிடியாத நிலை ஏற்படும் போது மத்தியஸ்தம் செய்யப்படவில்லை என்றதற்கான சான்றிதழ் ஒன்று சமபந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும். அத்துடன் குறித்த தரப்பினர்களுக்கு குறித்த விடயம் தொடர்பாக வழக்கு ஒன்றினைத் தொடர்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். தமது தகராறு ஒன்றினை மத்தியஸ்த சபை ஊடாக மத்தியஸ்தம் செய்து கொண்டவர்களில் ஒரு தரப்பினர் தாம் உடன்பட்ட விடயங்கள் தொடர்பில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மாற்றமாக நடந்து கொள்ளுமிடத்து அல்லது மத்தியஸ்தம்’ தொடர்பான உட்பாடுகளை மீறுமிடத்து, அது தொடர்பில் அடுத்த தரப்பினர் மத்தியஸ்த சபைக்கு அறிவிக்க வேண்டும் என்பதாக 1988 ஆம் ஆண்டு மத்தியஸ்த சபைகள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்தியஸ்த சபைகள் அமைத்தல்

மத்தியஸ்த சபை ஒன்றினை அமைக்கும் போது பின்பற்றப்படவேண்டிய சட்ட ரீதியிலான சில நடைமுறைகள் காணப்படுகின்றன. அவைகள் கீழே குறிப்பிடப்படுகின்றது.

  1. மத்தியஸ்த சபை அமைக்கப்பட வேண்டிய பிரதேசம் குறித்த விபரங்கள் நீதி அமைச்சின் மூலமாக வர்தமானி அறிவித்தலாகப் பிரசுரிக்கப்படும்.
  2. தனிநபர்கள், சமூகசேவை நிறுவனங்கள் அரச நிறுவனங்கள் என்பவற்றுக்கு மத்தியஸ்த சபைக்கான பெயர்களைப் பரிந்துரைக்குமாறு அறிவித்தல் ஒன்று மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் வர்த்தமானி ஊடாகப் பிரசுரிக்கப்படும்.
  3. பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்காக மத்தியஸ்த சபைகள் ஆணைக்குவினால் நேர்முகப் பரீட்சைகள் நடாத்தப்பட்டு தகுதியுள்ளவர்கள் பயிற்சி வழங்குவதற்காகத் தெரிவுசெய்யப்படுவர்.
  4. மத்தியஸ்தர்களாவதற்கு அவசியமான திறன்களையும் நுட்பங்களையும் உள்ளடக்கிய விசேட பயிற்சிநெறி ஒன்று ஏற்பாடு செய்யப்படும்.
  5. அதனை அடுத்து நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்கள் மேற்படி பயிற்சி நெறியில் உட்படுத்தப்படுவர். இந்த பயற்சிநெறியின் போது பயிற்சிபெறுகின்றவர்கள் கண்காணிக்கப்பட்டு அவர்களது அறிவு, திறன் என்பன குறித்து பயிற்றுவிப்பாளர்களால் அறிக்கை தயாரிக்கப்கட்டு நியமனம் வழங்குவதற்கான பரிந்துரைகள் வழங்கப்படும்.
  6. மேற்படி பரிந்துரைகளுக்கு அமைய மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் நியமனங்கள் வழங்கப்பட்டு உரிய பிரதேசங்களுக்கான மத்தியஸ்த சபைகள் அமைக்கப்படும்.

விசேட மத்தியஸ்த சபை ஒன்றினை அமைக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய பொதுவான நடைமுறைகள் கீழே குறிப்பிடப்படுகின்றன

  1. தகராறுகளின் வகைகள், விசேட மத்தியஸ்த சபை அமைக்கப்பட வேண்டி பிரதேசம், நிதியின் அளவுகள், மத்தியஸ்தர்களாவதற்கான தகுதிகள் என்பன குறித்த விபரங்கள் நீதி அமைச்சின் மூலமாக வர்தமானி அறிவித்தலாகப் பிரசுரிக்கப்படும்
  2. தனிநபர்கள், சமூகசேவை நிறுவனங்கள் அரச நிறுவனங்கள் என்பவற்றுக்கு மத்தியஸ்த சபைக்கான பெயர்களைப் பரிந்துரைக்குமாறு அறிவித்தல் ஒன்று மத்தியஸ்த சபைகள் ஆணைக் குழுவினால் வர்த்தமானி ஊடாகப் பிரசுரிக்கப்படும்
  3. பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்காக நிதி அமைச்சினால்/ மத்தியஸ்த சபைகள் ஆணைக்குவினால் நேர்முகப் பரீட்சைகள் நடாத்தப்பட்டு தகுதியுள்ளவர்கள் பயிற்றப்படுவதற்காக மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் தெரிவு செய்யப்படுவர்.
  4. பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்காக மத்தியஸ்தர்களாவதற்கு அவசியமான திறன்களையும் நுட்பங்களையும் உள்ளடக்கிய விசேட ஆறு (6) நாட்கள் கொண்ட பயிற்சிநெறி ஒன்று மத்தியஸ்த பயிற்றுவிப்பாளர்களால் நடாத்தப்படும்.
  5. தெரிவு செய்யப்பட்டவர்கள் மேற்படி பயிற்சி நெறியில் உட்படுத்தப்படுவர். இந்த பயற்சி நெறியின் போது பயிற்சிபெறுகின்றவர்கள் கண்காணிக்கப்பட்டு அவர்களது அறிவு, திறன் என்பன குறித்து பயிற்றுவிப்பாளர்களால் அறிக்கை தயாரிக்கப்ட்டு நியமனம் வழங்குவதற்கான பரிந்துரைகள் மத்தியஸ்த சபைகள் ஆணைக் குழுவுக்கு வழங்கப்படும்.
  6. மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் நியமனங்கள் வழங்கப்பட்டு விசேட மத்தியஸ்த சபைகள் அமைக்கப்படும்
  7. விசேட மத்தியஸ்த செயற்பாடுகள் குறித்தும் சமரசம் செய்யப்பட வேண்டிய தகராறுகளின் வகைகள் குறித்தும் தேவையான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்ட மேலதிக பயிற்சிகள் விசேட வளவாளர்களைக் கொண்டு நடாத்தப்படும்  
  8. பங்குதார்களின் கலந்துரையடலும் விசேட மத்தியஸ்த சபைகள் அமைக்கின்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

மத்தியஸ்த சபைகளில் உள்ளடக்கப்படும் அங்கத்தவர் தொகை

ஒரு மத்தியஸ்த சபைக்காக 12 முதல் 15 பேர்கள் வரையில் நியமிக்கப்படுவதுடன் ஒவ்வொரு மத்தியஸ்த அமர்வுகளுக்கும் மூன்று பேர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும். மத்தியஸ்த சபையில் அங்கம் வகிக்கின்றவர்கள் மத்தியஸ்த அமர்வுகளுக்காக சுழற்றி முறையில் அமரச் செய்யப்படுவர். ஒவ்வொரு மத்தியஸ்த அமர்வுகளுக்கும் நியமிக்கப்படுகின்றவர்களில் ஒருவர் பிரதான மத்தியஸ்தராக இருக்கவேண்டும். 12 அல்லது 15 பேர் கொண்ட மத்தியஸ்த சபையின் தலைவராக செயற்படுகின்றவர் குறித்த 3 பேர் கொண்ட குழுவில் அங்கம் வகிப்பாரானால் பிரதான மத்தியஸ்தராக அவரே செயற்படுவார். அவர் அந்தக் குழுவில் அங்கம் வகிக்காதவிடத்து ஏனைய அங்கத்தவர்களில் ஒருவர் பிரதான மத்தியஸ்தராகச் செயல்படுவார்.