சமூக மத்தியஸ்த சபை
1988 ஆம் ஆண்டு 72 ஆம் இலக்க மத்தியஸ்த சபைகள் சட்ட மூலத்தின் ஊடாக மத்தியஸ்த சபைகளுக்கு சட்ட ரீதியான அங்கீகராரம் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தின் பயனாக மத்தியஸ்த சபைகள் வலையமைப்பு சட்ட ரீதியிலான ஒரு நிறுவன அமைப்பாக மாற்றமடைந்திருப்பதுடன் இவைகள் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் நிர்வாக ரீதியிலான மேற்பார்வையின் கீழ் இயங்கிவருகின்றன. மத்தியஸ்தர்களை நியமித்தல், மேற்பார்வை செய்தல், கட்டுப்பாடுகளை விதித்தல் போன்ற அதிகாரங்கள் மத்தியஸ்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும் மத்தியஸ்தர்களுக்கு பயிற்சிகள் வழங்குகின்ற நடவடிக்கைகள் சட்டத்தின் அடிப்படையிலோ அல்லது நிர்வாகக் கட்டமைப்பிலோ உள்ளடக்கப்டுவதில்லை என்பதுடன் நிர்வாக ரீதியிலான நடைமுறைகளுக்கு அமைவாக பயிற்றுவிப்பு நடவடிக்கைகள் நீதி அமைச்சின் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றன.
மத்தியஸ்த சபைகள் சட்டமூலத்தின் 6 வது அத்தியாயத்தில் மத்தியஸ்த சபைகளுக்கு காணப்படுகின்ற அதிகார வரம்புகள் குறித்து குறிப்பிடப்படுள்ளது. ஏதாவது ஒரு பிரதேச எல்லைக்குள் ஏற்படுகின்ற எந்த ஒரு தகராறுகளையும் மத்தியஸ்தம் செய்துகொள்வதற்காக எந்த ஒருவருக்கும் அந்த பிரதேச எல்லைக்குள் இயங்குகின்ற மத்தியஸ்த சபைகளுக்கு விண்ணப்பம் ஒன்றினைச் சமர்ப்பிக்கலாம். எனவும்,. சொத்துகள் தொடர்பான தகராறுகளைப் பொறுத்தவரையில் குறித்த தகராறுக்கு உரிய சொத்தின் பெறுமதி ஒரு இலட்சம் ரூபாவிலும் (ரூ 1,000,000) குறைவாக அமையும் போது இவ்வாறான தகராறுகள் கட்டாயமாக மத்தியஸ்த சபைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதாகவும், சட்டமூலத்தின் இரண்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் கட்டாயமாக மத்தியஸ்த சபைகளுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதாகவும் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனிநபர்களுக்கு உடல் ரீதியாக ஏற்படுத்தப்படுகின்ற பாதிப்புக்கள் தொடர்பான குற்றங்கள் (காயம் ஏற்படுத்தல், முறையற்ற தடுத்துவைத்தல், முறையற்ற பலவ்வந்தப்படுத்தல்கள்) சொத்துகளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள், மானபங்கப்படுத்தல், மிரட்டல்போன்றன அந்த அட்டவனையில் குறிப்பிடப்பட்ட விடயங்களில் சிலவாகும். தகராறுக்கு உட்படுத்தப்பட்ட சாராரில் ஒரு பிரிவினர் அரசாங்கம் அல்லது அரச நிறுவனங்களைப் பிரதிநிதிபத்துவப்படுத்துகின்ற வகையில் இருக்கின்ற தகராறுகளைத் தீர்ப்தற்கான அதிகாரம் மத்தியஸ்த சபைகளுக்கு வழங்கப்படவில்லை. அத்துடன் மத்தியஸ்த சபைகளினால் மத்தியஸ்தம் செய்ய முடியாத விடயங்கள் எனபதாக பட்டியல் ஒன்று சட்மூலத்தின் 3 வது அட்டவணையாகத் தரப்பட்டுள்ளது. திருமணம் தொடர்பிலான தகராறுகள், ஒப்பந்தங்களுடன் தொடர்புடைய விடயங்கள், பிரிவிடுதல் வழக்குகளுடன் தொடர்பான விடயங்கள், பாராளுமன்ற சிறப்புரிமைகள் மீறுதல் தொடர்பான வழக்குகள் என்பன அந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்ட விடயங்களில் சிலவாகும்.
சுமார் 30 வருடங்கள் கடந்திருக்கின்ற நிலையில் தன்னார்வ அடிப்டையில் கடமையாற்றுகின்ற 8500 இற்கும் அதிமான மத்தியஸ்தர்களுடனும் 325 மத்தியஸ்த சபைத் தலைவர்களுடனும் (இவர்களில் 282 பேர் ஆண்களாகவும் 43 பேர் பெண்கள்) மிகவும் பலம் பொருந்தியதாக தேசிய மதியஸ்த கட்மைப்பு நாடு முழுவதிலும் 331 மத்தியஸ்த சபைகளாக இயங்கி வருகின்றது.
இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள மத்தியஸ்த நிலையங்கள் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்குவதாக அமைந்திருப்பதுடன் 260 மத்தியஸ்த சபைகள் சிங்கள மொழி மூலமும் 63 மத்தியஸ்த சபைகள் தமிழ் மொழியிலும் தமது சேவைகளை வழங்குகின்றன.. மத்தியஸ்த சபைகளின் சேவைகள் பல்வேறு மொழிகளிலும் வழங்கப்படுவதனால் இலங்கையின் அனைத்து பிரஜைகளுக்கும் பிரதேசம் மொழி என்ற பாகுபாடுகள் இல்லாமல் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது.

