சமூக மத்தியஸ்தம் என்றால் என்ன?
தகராறுகளைத் தீர்ப்பதற்கான பிரபல்யமானதொரு மாற்றீட்டுப் பொறிமுறையாக சமூக மத்தியஸ்த செயன்முறை காணப்படுகின்றது.. ஒரு சமூகத்திற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் குழுவிற்கோ இந்த வகையிலான மத்தியஸ்த செயற்பாடுகளின் ஊடாக அவர்களது பிரச்சினைகளைத் சுமூகமாகத் தீர்ப்பதற்கு ஒத்தாசை வழங்கப்படுவதனால் இந்தப் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.
சமூகம் தொடர்பான தகராறுகளைத் தீர்பது என்பது சமூ மத்தியஸ்தத்தின் பிரதான பணியாகும். இங்கு முக்கியமாக அண்டை வீட்டார்களுக்கு இடயே இடம்பெறுகின்ற தகராறுகள், காணி உரிமையாளர்களுக்கும் அந்தக் காணிகளைக் குத்தகைக்கு பெற்றவர்களுக்கும் இடையே ஏற்படுகின்ற தகராறுகள், தனிநபர்களுக்கு இடையே ஏற்படுகின்ற தகராறுகள், பொதுவாக ஏற்படுகின்ற சிவில் சார்ந்த பிரச்சனைகள், குடும்ப பிணக்குகள், காணி மற்றும் சொத்து தொடர்பான தகராறுகள், காணிகளின் எல்லைகள், பாதைகள், காணிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தல், போன்ற தகராறுகள் , உரிமை மற்றும் உடமை தொடர்பான சர்ச்சைகள் இங்கு முக்கியத்துவம் பெறுபவையாகக் காணப்படுகின்றன.
சமூக மத்தியஸ்த சபைகளை நிறுவுவதன் ஊடாக சமூகத்தில் காணப்படுகின்ற தகராறுகள் மத்தியஸ்தம் செய்கின்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட மத்தியஸ்த சபையானது அதற்காக வரையறுக்கப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்டபட்ட பிரதேசத்தில் வசிக்கின்றவர்களுக்காக மாத்திரமே சேவையாற்றுவதாகின்றனர். இதன் காரணமாக இந்த மத்தியஸ்த செயல்முறையானது சமூகத்தின் கட்டமைப்பிலும் சமூக நடைமுறையிலும் வேரூன்றியதாகக் காணப்படுகின்றது. அத்துடன் மேற்படி நடைமுறை பின்பற்றப்படுவதானது சமூக மத்தியஸ்த செயன்முறை ஒர் இடத்திற்கு மட்டுப்படுத்தப்படானது இலங்கை முழுவதும் பரந்து விரிவதற்கு காரணமாக அமைந்துள்ளது. மத்தியஸ்த சபைகளின் அங்கத்வர்கள் தன்னார்வ அடிப்படையில் இணைவதாலும் அவர்கள் அந்தப் பிரதேசங்களில் வசிப்பவர்களிலிருந்து தெரிவு செய்யப்படுவதானாலும் இந்தக் கட்டமைப்பானது இன்னும் பலம்பெற்றதாக அமைகின்றது. தற்போதளவில், இலங்கையில் பல்வேறுபட்ட மக்கள் தொகைகளுடன் 330 பிரதேச செயலகப் பிரிவுகளில் இயங்கி வருகின்றன.
தனிப்பட்ட ரீதியிலும் சமூக ரீதியிலும் ஏற்படுகின்ற தகராறுகள் மற்றும் சிறிய குற்றங்களுக்காக அவற்றுடன் சம்பந்தப்பட்ட தரப்பினர்களை இணங்க வைக்கின்ற அடிப்படையில் தீர்வுகளைப் பெறுவதற்கான பங்களிப்பினை சமூக மத்தியஸ்தம் தொடராக வழங்கி வருகின்றது... இவ்வாறு பரந்த வலையமைப்பொன்றாகச் செயற்படுகின்ற மத்தியஸ்த சபைகள், நீதிமன்றத்தின் செயற்பாடுகளுடன் ஒப்பிடும்போது மிக விரைவானதும் செலவு குறைந்ததுமான மாற்றீட்டு செயற்பாட்டுத் திட்டமாக செயல்படுகின்றது. மேலும் அந்த நடவடிக்கைகளில் வெற்றியும் கண்டுள்ளதுடன் ஒருங்கிணைந்த சமூக்கக் கட்டமைப்பு ஒன்றினை கட்டிய்யெழுப்புவதிலும் தமது பங்களிப்பினை வழங்கி வெற்றிகண்டுள்ளது
சமூக மத்தியஸ்த சபை
1988 ஆம் ஆண்டு 72 ஆம் இலக்க மத்தியஸ்த சபைகள் சட்ட மூலத்தின் ஊடாக மத்தியஸ்த சபைகளுக்கு சட்ட ரீதியான அங்கீகராரம் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தின் பயனாக மத்தியஸ்த சபைகள் வலையமைப்பு சட்ட ரீதியிலான ஒரு நிறுவன அமைப்பாக மாற்றமடைந்திருப்பதுடன் இவைகள் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் நிர்வாக ரீதியிலான மேற்பார்வையின் கீழ் இயங்கிவருகின்றன. மத்தியஸ்தர்களை நியமித்தல், மேற்பார்வை செய்தல், கட்டுப்பாடுகளை விதித்தல் போன்ற அதிகாரங்கள் மத்தியஸ்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும் மத்தியஸ்தர்களுக்கு பயிற்சிகள் வழங்குகின்ற நடவடிக்கைகள் சட்டத்தின் அடிப்படையிலோ அல்லது நிர்வாகக் கட்டமைப்பிலோ உள்ளடக்கப்டுவதில்லை என்பதுடன் நிர்வாக ரீதியிலான நடைமுறைகளுக்கு அமைவாக பயிற்றுவிப்பு நடவடிக்கைகள் நீதி அமைச்சின் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றன.
மத்தியஸ்த சபைகள் சட்டமூலத்தின் 6 வது அத்தியாயத்தில் மத்தியஸ்த சபைகளுக்கு காணப்படுகின்ற அதிகார வரம்புகள் குறித்து குறிப்பிடப்படுள்ளது. ஏதாவது ஒரு பிரதேச எல்லைக்குள் ஏற்படுகின்ற எந்த ஒரு தகராறுகளையும் மத்தியஸ்தம் செய்துகொள்வதற்காக எந்த ஒருவருக்கும் அந்த பிரதேச எல்லைக்குள் இயங்குகின்ற மத்தியஸ்த சபைகளுக்கு விண்ணப்பம் ஒன்றினைச் சமர்ப்பிக்கலாம். எனவும்,. சொத்துகள் தொடர்பான தகராறுகளைப் பொறுத்தவரையில் குறித்த தகராறுக்கு உரிய சொத்தின் பெறுமதி ஒரு இலட்சம் ரூபாவிலும் (ரூ 1,000,000) குறைவாக அமையும் போது இவ்வாறான தகராறுகள் கட்டாயமாக மத்தியஸ்த சபைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதாகவும், சட்டமூலத்தின் இரண்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் கட்டாயமாக மத்தியஸ்த சபைகளுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதாகவும் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனிநபர்களுக்கு உடல் ரீதியாக ஏற்படுத்தப்படுகின்ற பாதிப்புக்கள் தொடர்பான குற்றங்கள் (காயம் ஏற்படுத்தல், முறையற்ற தடுத்துவைத்தல், முறையற்ற பலவ்வந்தப்படுத்தல்கள்) சொத்துகளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள், மானபங்கப்படுத்தல், மிரட்டல்போன்றன அந்த அட்டவனையில் குறிப்பிடப்பட்ட விடயங்களில் சிலவாகும். தகராறுக்கு உட்படுத்தப்பட்ட சாராரில் ஒரு பிரிவினர் அரசாங்கம் அல்லது அரச நிறுவனங்களைப் பிரதிநிதிபத்துவப்படுத்துகின்ற வகையில் இருக்கின்ற தகராறுகளைத் தீர்ப்தற்கான அதிகாரம் மத்தியஸ்த சபைகளுக்கு வழங்கப்படவில்லை. அத்துடன் மத்தியஸ்த சபைகளினால் மத்தியஸ்தம் செய்ய முடியாத விடயங்கள் எனபதாக பட்டியல் ஒன்று சட்மூலத்தின் 3 வது அட்டவணையாகத் தரப்பட்டுள்ளது. திருமணம் தொடர்பிலான தகராறுகள், ஒப்பந்தங்களுடன் தொடர்புடைய விடயங்கள், பிரிவிடுதல் வழக்குகளுடன் தொடர்பான விடயங்கள், பாராளுமன்ற சிறப்புரிமைகள் மீறுதல் தொடர்பான வழக்குகள் என்பன அந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்ட விடயங்களில் சிலவாகும்.
சுமார் 30 வருடங்கள் கடந்திருக்கின்ற நிலையில் தன்னார்வ அடிப்டையில் கடமையாற்றுகின்ற 8500 இற்கும் அதிமான மத்தியஸ்தர்களுடனும் 325 மத்தியஸ்த சபைத் தலைவர்களுடனும் (இவர்களில் 282 பேர் ஆண்களாகவும் 43 பேர் பெண்கள்) மிகவும் பலம் பொருந்தியதாக தேசிய மதியஸ்த கட்மைப்பு நாடு முழுவதிலும் 331 மத்தியஸ்த சபைகளாக இயங்கி வருகின்றது.
இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள மத்தியஸ்த நிலையங்கள் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்குவதாக அமைந்திருப்பதுடன் 260 மத்தியஸ்த சபைகள் சிங்கள மொழி மூலமும் 63 மத்தியஸ்த சபைகள் தமிழ் மொழியிலும் தமது சேவைகளை வழங்குகின்றன.. மத்தியஸ்த சபைகளின் சேவைகள் பல்வேறு மொழிகளிலும் வழங்கப்படுவதனால் இலங்கையின் அனைத்து பிரஜைகளுக்கும் பிரதேசம் மொழி என்ற பாகுபாடுகள் இல்லாமல் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது.
சமூக மத்தியஸ்த செயற்பாட்டின் செயற்திறன்
தீர்க்கப்ட்ட தகராறுகள்
வெற்றிகரமாக தீர்த்து வைக்கப்பட்ட தகராறுகளின் எண்ணிக்கையானது செயற்திட்டம் வெற்றிகரமானது என்பதற்கான எடுத்துக்காட்டாகும்
தரப்பினரின் திருப்திப்படல் அளவு
தரப்பினர்களிடம் பெறப்படுகின்ற மதிப்பீடுகள் பின்னூட்டல்கள் என்பவற்றின் மூலமாக மத்யஸ்த செயற்பாடுகள் குறித்தும் அதன் பிரதிபலன்கள் குறதித்தும் அவர்களின் திருப்தி குறித்து புரிந்துகொள்ளமுடிகிறது
குறைந்தசெலவு
நீதிமன்ற வழக்குகளுடன் ஒப்பிடும்போது மத்தியஸ்த செயற்பாடுகளுக்கான செலவானது மத்தியஸ்த செயற்பாட்டின் செயற்திறம் அளவிடுவதற்கான ஒரு அளவீட்டு முறையாகும்
நேரவிரயம் குறைவு
நீதிமன்றசெயற்பாடுகளுடன் ஒப்பிடுகையில் மத்தியஸத செயற்பாடானது குறைந்த அளவு காலத்தையே எடுத்துக்கொள்கின்றது என்ற விடயமும் செயற்திறன் அளவுகோள்க்க் காணப்படுகின்றது
மீண்டும் வழக்குத்தொடரல்
மத்தியஸ்த செயற்பாட்டில் ஈடுபுகின்றவர்கள் அவர்களது தீர்வு குறித்து திருப்தி கொள்வார்களாயில் மீண்டும் வழங்குத் தொடராமல் இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம்
சமாதானம் நல்லிணக்கம் முதன்மைப்படுத்தல்
இலங்கையில் காணப்படுகின்ற சமூகங்களுக்கு இடையேயான சமாதான. நல்லிணக்கம் என்பவற்றை விருத்தி செய்வதில் பங்களிக்கின்ற ஒரு முக்கியமான கட்ட மைப்பாக சமூக மத்தியஸ்த வேலைத்திட்டம் காணப்படுகின்றது

