நோக்கு
மத்தியஸ்த்தத்தின் ஊடாக நல்லிணக்கத்தினையும் சாவாழ்வினையும் உறுதி செய்தல்
நோக்கு
மத்தியஸ்த்தத்தின் ஊடாக நல்லிணக்கத்தினையும் சாவாழ்வினையும் உறுதி செய்தல்
பணிக்கூற்று
பொதுமக்களின் நலனுக்காக வினைத்திறன் கொண்டதாக தகராறுகளைத் தீர்க்கின்ற பொறிமுறை ஒன்றினை நாடுமுழுதும் வியாபிக்கச் செய்தல்.
மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு என்பது 1988 ஆம் ஆண்டின் மத்தியஸ்த சபைகள் சட்டமூலத்தின் கீழ் நிறுவப்பட்ட சுயாதீன நிறுவனமாகும். மத்தியஸ்த ஆணைக் குழுவில் 5 பேர்கள் அங்கம் வகிக்க வேண்டும் எனவும் அவர்களில் மூவர் உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியாக இருக்கவேண்டும் எனவும் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவானது (MBC) மத்தியஸ்த செயற்பாட்டினை மேற்கொள்கின்ற அதேநேரம் அதற்கான நிர்வாக ரீதியானதும் கொள்கை ரீதியானதுமான பங்களிப்பு நீதி அமைச்சின் மூலமாக வழங்கப்படுகின்றது. தற்போதளவில் 329 மத்தியஸ்த சபைகளும் 16 காணி தொடர்பான மத்தியஸ்த சபைகளும் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கி வருகின்றது.
மத்தியஸ்த ஆணைக் குழுவிடம் காணப்படுகின்ற அதிகாரங்களும் பொறுப்புக்களும் பின்வருமாறு
மத்தியஸ்த பயிற்றுவிப்பு உத்தியோகத்தர்கள் (MTOs) என்போர் நீதி அமைச்சின் விடயப் பரப்பிற்கு உட்பட்வர்களாக இருப்பதுடன் அரச நிர்வாக சேவையின் ஒரு பகுதியினராகவும் காணப்படுகின்றனர். மத்தியஸ்தர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதும் மத்தியஸ்த செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதும் இவர்களது பிரதான பொறுப்புகளாகும். சில சந்தர்ப்பங்களின் போது மத்தியஸ்த பயிற்சி உத்தியோகத்தர்களினால் சமூக மத்தியஸ்த செயற்பாடு குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான நிகழ்ச்சிகளும் நடாத்தப்படுகின்றது.
தேவை ஏற்படுகின்றபோது மத்தியஸ்த பயிற்றுவிப்பு உத்தியேகத்தர்கள் தேவைகளுக்கு ஏற்ப தங்களது திறன்களையும் அறிவு மட்டத்தையும் விருத்தி செய்வதற்காக உரிய பயிற்சிகளையும் பெற்றுக் கொள்கின்றனர், இந்த நோக்கத்திற்காக பால்நிலை, பல்வகைமை, மத்தியஸ்த சபை முகாமைத்துவம், தகவல்கள் சேகரித்தல் போன்ற பரந்த அளவிலான தலைப்புக்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மத்தியஸ்த நிபுணர்களின் மூலமாக மத்தியஸ்த பயிற்றுவிப்பு உத்தியேகத்தர்கள்களுக்கான விசேட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மத்தியஸ்தம் தொடர்பாக காணப்படுகின்ற சட்டதிட்டங்கள் குறித்தும். )விசேட மத்தியஸ்த நடவடிக்கைகளில் காணப்படுகின்ற) விடயப்பரப்பு தொடர்பிலும் உரிய அறிவினைப் பெற்றிருப்பதன் அவசியம் குறித்து அவர்களுக்கு உணர்த்தப்பட்டுள்ளது.
மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு ஒத்தாசை வழங்கப்படுகின்ற செயற்பாடு மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்படுகின்றது.. இந்தப் பணியினை மேற்கொள்வதற்காக இலங்கையில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் இந்த வகையான உத்தியோகத்தர்கள் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேற்குறிப்பிட்ட பிரதான பணிக்கு மேலதிகமாக உரிய தகவல்களைச் சேகரித்தல், மத்தியஸ்தம் தொடர்பான விழிப்புணவு வழங்குதல் என்பவற்றையும் மேற்கொள்ளகின்றனர். மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்தியஸ்த பயிற்றுவிப்பு உத்தியோகத்தரகளுடனும் மத்தியஸ்த செயற்திட்ட உத்யோகத்தர்களுடனும் இணைந்து மத்தியஸ்தம் தொடர்பான முன்னேற்றங்களைக் காண்காணிக்கின்ற செயற்பாட்டிற்கும் பங்களிக்கின்றனர்.
பிணக்குகளை ஏற்படுத்திக் கொண்டவர்கள் தங்களுக்கிடையே கலந்துரையாடும் போது அதற்கான வசதிகளை வழங்கும் மூன்றாவது தரப்பினராக மத்தியஸ்தர்கள் செயற்படுகின்றனர். குறித்த இரண்டு தரப்பினர்கள் தங்களது எதிர்பார்ப்புக்களையும் தேவைகளையும் இனங்காண்பதற்கும் அவர்கள் எதிர்பார்க்கின்ற அடிப்படையிலான சுமூகமான தீர்வுகளை அடைந்துகொள்வதற்கும் ஒத்தாசை வழங்கி அவர்களுக்களை வழிநடத்துவது மத்தியஸ்தர்களின் பிரதான பணியாகும்.
இலங்கையில் மத்தியஸ்த செயற்பாட்டுகளில் தன்னார்வமாக இணைந்து கொண்டுள்ள மத்தியஸ்தர்களின் தொகை 8500 இனைத் தாண்டியிருக்கின்றது. மத்திய ஸ்தர்களுக்காக நீதி அமைச்சினால் அவசியமான பயிற்சிகள் ஏற்பாடுசெய்யப்படும். மத்தியஸ்த பயிற்றுவிப்பு உத்தியோகத்தர்களினால் நடாத்தப்படுகின்ற திறன்கனை விருத்தி செய்வதற்கான 5 நாட்கள் கொண்ட பயிற்சிநெறியில் பங்குகொள்கின்றவர்கள் மத்திரமே மத்தியஸ்தர்களாக நியமனம்பெறத் தகுதியானவர்களாவர். ஒவ்வொரு மூன்’று வருடங்களுக்கு ஒரு முறையும் மத்தியஸ்த சபைகள் அமைக்கப்படும்போது இந்த பயிற்சிச் செயலமர்வுகள் நடாத்தப்படுவதுடன் பயிற்சியின் முடிவில் உரிய தகைமைகளைப் பூர்த்தி செய்கின்றவர்கள் மத்தியஸ்தர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
மத்தியஸ்த சபைகளின் பணிகளுக்காக மத்தியஸ்தர்கள் நியமிக்கப்படும் போது மிக நீண்ட செயன்முறை ஒன்று பின்பற்றப்படுகின்றது. அந்த செயன்முறை கீழே விளக்கப்படுகின்றது.
ஏதாவது ஒரு பிரதேசத்தில் மத்தியஸ்த சபை ஒன்று நிறுவப்படுவதற்கான வர்j;தமானி அறிவித்தல் வெளியிடப்படும். அதன் பின்னர். பொதுமக்களில் எந்த ஒரு நபராலும் நிறுவனங்களினாலும், அல்லது சமூக சேவை அமைப்பினாலும் மத்தியஸ்தர்களாக நியமிக்கப்படுவதற்கு பொருத்தமானவர்கள் குறித்த தத்தமது விருப்புக்களைத் சார்ப்பிக்கலாம். அத்துடன் மத்தியஸ்தர்களாக நியமிப்பதற்கு பொருத்தமானவர்களின் பெயர்கள் தகுதிகள் என்பவற்றுடன் தங்களது பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
ஒருவர் மத்தியஸ்தராக நியமிக்கப்படுவதற்காக பெற்றிருக்க வேண்டிய அடிப்படைத் தகைமைகள் குறித்து யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் குறித்த பிரதேச் செயலகப் பிரிவில் நிரந்தரமாக வசித்தல், பணியாற்றுதல், அல்லது குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் அரச உத்தியோகத்தர் ஒருவராக இருத்தல் என்ற அடிப்படையில் வசிப்பிடம் தொடர்பான விடயம் முக்கிய தகைமையாகக் குறிப்பிடப்படுகின்றது.
மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் மத்தியஸ்தர்கள் தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சைத் தொடர் ஒன்று நடாத்தப்பட்டு அதன் ஊடாக ஆரம்ப கட்ட தெரிவுகள் மேற்கொள்ளப்படும்.
மேற்குறிப்பிட்ட அடிப்டையில் நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட மத்தியஸ்தர்களுக்காக திறன் விருத்தி செய்வதற்கான பயிற்சிநெறி ஒன்று நடாத்தப்படும்.. இவ்வாறு வழங்கப்படுகின்ற பயிற்சிநெறியின் முடிவில் அவர்களின் நுண்ணறிவுத்திறன் மற்றும் தகுதி என்பன பரீட்சிக்கப்பட்டு அவற்றின் அடிப்படையில் இறுதித் தெரிவு நடாத்தப்படும். இங்கு தகுதிகள் பரிசோதிப்பது குறித்த அனைத்து முடிவுகளும் நீதி அமைச்சின் கீழ் இயங்குகின்ற பயிற்றுவிப்பு உத்தியோத்தர்களால் மேற்கொள்ளப்படும்.