1871 ஆம் ஆண்டில், பிரித்தானிய அரசினால் "கிராமிய சமூகங்கள் கடளைச் சட்டம்” என்ற புதிய சட்டம் இயற்றப்பட்டது, முறைசாராத அடிப்டையில் இருந்த கம்சபா எனும் கட்டமைப்பு இந்த சட்டத்தின் மூலமாக "கிராம சமூகங்கள்" என்ற பெயரில் நீதித்துறையில் உட்படுத்தப்பட்டு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது. . இந்த கிராம சமூகங்கள் என்ற கட்டமைப்பிற்கு வரையறுக்கப்பட்ட அளவிலான நீதிமன்ற அதிகாரங்களும் நிர்வாக ரீதியிலான அதிகாரங்களும் வழங்கப்பட்டிருந்தன. அத்துடன், பிரித்தானிய நீதிக் கட்டமைப்பில் மிகவும் அடிமட்டத்தில் செயல்படுகின்ற நீதிமன்றமாக "கிராம சமூகங்கள்" என்ற கட்டமைப்பு செயல்பட்டது.