மத்தியஸ்த சபைகள் சட்டத்தின் பிரகாரம் (இல 72/1988) இலங்கையில் முதலாவது சமூக மத்தியஸ்த சபையானது (CMBs) 1990 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மத்தியஸ்த சபைகள் என்பது, மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு எனும் சுயாதீனமாக இயங்குகின்ற நிறுவனத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் உள்ளடங்குகின்றது. அத்துடன் ,நீதி அமைச்சின் கொள்கை ரீதியிலானதும் நிர்வாக ரீதியானதுமான ஒதுழைப்பினையும் கொண்டுள்ளது. இன்றளவில் இந்த கட்டமைப்பானது நாடு முழுவதும் பரந்து விரிந்து, 329 சமூக மத்தியஸ்த சபைகளில் (CMBs) 8,600 க்கும் அதிகமான பயிற்சி பெற்ற மத்தியஸ்தர்கள் இணைந்து செயற்படுகின்ற அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. இந்த மத்தியஸ்தர்களில் 27% ஆனவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்., இந்த மத்தியஸ்தர்களின் மூலமாக வருடத்தில் சுமார் 250,000 ற்கும் அதிகமான பிணக்குகள் மத்தியஸ்தத்திற்காக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு மத்தியஸ்தத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்ற தகராறுகளில் 65% ஆனவைகள் தீர்த்து வைக்கப்படுகின்றன. இவை தவிர சில விசேட பிரதேசங்களில் ஏற்படுகின்ற சமூக பொருளதார பிணக்குகளை (உ+ம் காணி மற்றும் நிதி சார்ந்த தகராறுகள்) தீர்ப்பதற்காக விசேட மத்தியஸ்த சபைகளும் (SMBs) காணப்படுகின்றன.

